மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

- Advertisement -

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு செல்லும் அனைவரும் வீடுகளிலும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என, தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை அறிக்கைகளில் சில தவறுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எந்தவொரு ஆய்வுகூட பரிசோதனைகளிலும் சில சமயங்களில் சிறிய அளவிலான தவறான முடிவுகள் பெறப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், PCR மற்றும் Rapid Antigen ஆகிய இரண்டு பரிசோதனைகளுக்கும் இந்த விடயம் பொருந்தும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக ஒரு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் ஒருவருக்கு, மற்றுமொரு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பரிசோதனை அறிக்கைகள் அவ்வாறே ஏற்கப்படுவதில்லை எனவும், கொரோனா தொற்றை உறுதி செய்வதற்கு மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்றுநோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz