மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவர்களின் விபரம்!

- Advertisement -

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில், மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய கணிதப் பிரிவில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிகப் பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமரச்சந்திரன் சந்திரவதனன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சுபிலஹ்சி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி குமணன் செந்தூரணி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவன் செல்வன் கருணைராஜன் மகரதன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், இந்த எண்ணிக்கையானது மொத்த பரீட்சார்த்திகளில் 64 தசம் 39 வீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபெறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz