மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் சாதாரண உயிரிழப்புகள் குறித்து சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்!

- Advertisement -

வைத்தியசாலைகளில் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் 24 மணித்தியாலத்திற்குள் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களைத் தவிர வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் ஏனையோரின் மரணச் சடங்குகள், வைத்தியசாலையினால் சடலம் ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மரணச் சடங்கு இடம்பெறும் வீட்டில் அதிக பட்சமாக 25 பேர் மட்டுமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள திரையரங்குகள் மற்றும்  சிறுவர் பூங்காக்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதன்படி, சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவற்றை மூடுவதற்கு தீர்மானித்ததாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பௌத அறநெறிப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பாடசசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், முதலாவது ஞாயிற்றுக் கிழமையில் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் என்பன தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல், ஒரு வார காலத்திற்கு குறித்த அலுவலகங்கள் மூடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகங்களில் பணிபுரியும் சில ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz