மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார நடைமுறைகளை மீறி யாழில் ஆலய உற்சவம் -கைதான இருவருக்கும் பொலிஸ் பிணை!

- Advertisement -

கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.

- Advertisement -

இதன்போது, பாரிய அளவிலான மக்களை ஒன்றுகூட அனுமதித்ததன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாப்ப்பை உருவாக்கியதாக ஆலய நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர், நேற்று இரவு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz