மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

- Advertisement -

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலமானது அரசியலமைப்பை மீறும் வகையில் உருவாக்கபட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன்படி, பிரதம நீதியரசரான ஜயந்த ஜயசூரிய தலைமையிலான இந்த குழுவில் நீதிபதிகளான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இவ்வாறு மனுத்தாக்கல் செய்துள்ளன.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுவாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமென உத்தரவிடுமாறும் மனுத்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சட்டமூலத்தின் 6 ஆவது சரத்தின் முதலாம் பிரிவில் கொழும்பு துறைமுகநகரத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்றுமதி மற்றும் வியாபார நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தீர்மானம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு மாத்திரம் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த சட்டமூலமானது பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக நகரத்தில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான வீசா விநியோகிப்பது முதல் அதற்கான அனுமதி வழங்குவதற்கான அதிகாரமும் பொருளாதார ஆணைக்குழுவுக்கே உள்ளதாக சட்டமூலத்தின் சரத்தொன்றில் தெரிவிக்கபட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதனால், இந்த சட்டமூலம் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz