மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஆகியன, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்போது முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிடும் வரை, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 15 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள வகுப்புகளுக்கு, மாணவர்களை அனைத்து தினங்களிலும் பாடசாலைக்கு வரவழைக்க முடியும்.

அத்துடன், 16 முதல் 30 க்கு இடைப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள வகுப்புகளை இரண்டு குழுவாகவும், 30 க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள வகுப்புகளை மூன்று குழுக்களாகவும், பாடசாலைக்கு வரவழைக்க முடியும்.

மேலும், இதற்கு முன்னர் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டதைப் போலவே, எதிர்வரும் நாட்களிலும் அவற்றை பின்பற்றுவது அவசியம் என, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

எனினும், நாட்டில் கொரோனா தொற்று பரவலின் அச்சம் இதுவரை விலகவில்லை எனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களை பாடசாலைகளுக்கு மீள அழைக்க மேற்கொள்ளப்பட்ட முடிவில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமானால், அதனை விமர்சிப்பதை விடுத்து, கலந்துரையாடலின் மூலம் அவற்றை நிவர்த்திக்க முயற்சி செய்ய வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz