மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

- Advertisement -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல தடைகளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந. சிவகரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வானது மெய்யியல் துறை மாணவர்களினாலும் பிற துறையில் கற்றுவரும் மாணவர்களினாலும் நம் நாட்டில் நடைபெறுகின்ற சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாகவும் அப் பிரச்சினைகளை மெய்யியல் கருத்துக்களோடு தொடர்புபடுத்தியும் மெய்யியல் ரீதியான சிந்தனையை மையப்படுத்தியதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலமையாளார்களும் பிற பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து இவ் இணையவழி நிகழ்வினை சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் இவ் வாரம் இந்த நிகழ்வில் மெய்யியல் துறையின் மாணவர்களான கே.கம்சலா, வி.துஷியந்தன், ஜே.ஜினித்தா, டி.லிப்பிக்கா ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
கொரோனா தொற்றினால் சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளும் முடக்கம் கண்டிருக்கும் தற்போதைய சூழலில் நேரடியாக பங்கேற்க முடியாத சந்தர்ப்பத்திலும் இணையவழியாக Zoom செயலி ஊடாக இந் நிகழ்வானது நடைபெறுகின்றது. இந்த உரையரங்கில் Meeting ID: 828 322 6454 என்ற அடையாளத் தரவை அளிப்பதனூடாக உள்நுழைந்து பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz