மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலவீனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலாபம் தேடும் நிலைமைக்கு எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளது: விமல் கருத்து!

- Advertisement -

அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாத நிலையில், பலவீனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலாபம் தேடும் நிலைமைக்கு எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்துள்ள நிலையில், பல்வேறு சக்திகளும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெனீவாவில் நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சவால்களை முறியடித்து நாட்டின் இறையாண்மையை இந்த அரசாங்கம் பாதுகாத்துள்ளதாகவும், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது போன்ற வெற்றிகரமான நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியாததாலேயே, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் எதிர்க்கட்சி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டி வருவதாக, அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் வழங்கியுள்ள பலத்தின் மூலம் குறைபாடுகளை சரிசெய்து முன்னோக்கி செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும், அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz