மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் இந்த ஆண்டில் 2 பேரழிவுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது- ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு!

- Advertisement -

நாட்டு மக்கள் இந்த ஆண்டில் இரண்டு பேரழிவுகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொரோனா தொற்று பரவலுக்கு மேலதிகமாக, தரமற்ற உணவுப் பொருள் இறக்குமதிகளுக்கும் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை உரிய முறையில் நிர்வகிக்கத் தவறியுள்ளமையின் காரணமாக, குறைந்த விலையிலான பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார வீழ்ச்சி காரணமாகவே, தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரமற்ற பொருட்களைக் கண்டறிவதற்கு, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் போதிய உபகரணங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தரமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அரசாங்கம் இயற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களுக்கு தேவையான தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz