மெய்ப்பொருள் காண்பது அறிவு

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

- Advertisement -

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

முதற்தடவையாக   அரசாங்கம் ஒன்றினால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு   மோசடிகள்   வெளிகொணரப்படுகின்றன. அதற்கு முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவரை  எந்தவொரு அரசாங்கமும்  இவ்வாறான மோசடிகளை  அடையாளங் காண்பதற்கு நடவடிக்கை எடுத்ததில்லை. தேங்காய் எண்ணெய் மோசடியானது பல ஆண்டுகளாக  இடம்பெற்ற ஒன்றாகவே தெரிகின்றது. தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தியுள்ளது.எனவே   தேங்காய் எண்ணெய்   மோடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயனம் கலந்துள்ள தேங்காய் எண்ணெய்  மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இரசாயனம் அடங்கிய  தேங்காய் எண்ணெயை நாட்டிற்கு  இறக்குமதி செய்வதற்கு அனுமதித்தமை புற்றுநோய் கொத்தணியை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரவித்துள்ளார்.

இவ்வருடம் புத்தாண்டு தினத்தன்று புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயின் மூலமே இனிப்புப்பண்டங்கள் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வியாபார நிலையங்களில் விற்கப்படும் aflatoxin கலந்த புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை பாவிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆகவே, தரமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய இடமளித்தமை மிகப்பெரிய குற்றம் என்பதை நாம் மிக தெளிவாகக் கூறவேண்டும். இவற்றை மீள் ஏற்றுமதி செய்வதனால் இதிலிருந்து தப்பிக்க முடியாது. புற்றுநோய் ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை கொண்டுவர அனுமதித்த உரிய தரப்பினர் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கியால் சுட்டு சிலரை கொலைசெய்வார்கள். இல்லையெனில் குண்டு வைத்து குறிப்பிட்ட சிலரை கொலை செய்வார்கள். ஆனால் இது முழு நாட்டையும் புற்றுநோய் கொத்தணியாக உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமா என எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz