மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

- Advertisement -

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார்.

தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் இரண்டு அணண்மையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

- Advertisement -

இதேவேளை, குறித்த கொள்கலனில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயில் புற்றுசோயினை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்துள்ளமை இலங்கை தர நிர்ணயம் கட்டளை நிறுவனத்திடன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, புற்றுநோயினை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் எற்தவொரு சந்தர்ப்பத்திலும் நுகர்வோர் பாவணைக்கு விநியோகிக்கப்படவில்லை என சுங்கதிணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  விஜித் ரவிப்ரிய தெரிவித்திருந்தார்.

தங்கொட்டுவ பகுதியில்  அண்மையில்  பறிமுதல்  செய்யப்பட்ட  எண்ணெய் கொள்கலன்கள் இரண்டில் 55 ஆயிரம் லீற்றர் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து , குறித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் சுங்கத் திணைக்களத்தினரின் கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கொள்கலன்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த எண்ணெய் கொள்கலன்களில் 55 ஆயிரம் லீற்றர் எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz