Royal Challengers Bangalore அணியின் சகலதுறை வீரரான Daniel Sams கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் அமைந்துள்ள Royal Challengers Bangalore அணியின் ஹோட்டலுக்கு, Daniel Sams கடந்த 3 ஆம் திகதி வருகை தந்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் Daniel Sams க்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளதுடன், இதன்படி அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், Daniel Sams தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக, Royal Challengers Bangalore அணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, IPL இருபதுக்கு 20 தொடர் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.