மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றத்துக்குள்ளே இருந்து நீதிமன்றத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி – நாமல் தெரிவிப்பு

- Advertisement -

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 10 மணியளவில்  ஆரம்பமானது.

- Advertisement -

இதன்போது  சபாநாயகர் குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.

உங்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுமுறை யோசனையை முன்வைத்தோம்,நீங்கள் அதனை நிராகரித்தீர்கள்,அதனை பயன்படுத்தி தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்கின்றீர்கள்,நீங்கள் கூறியது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதினால் அதனை மேன்முறையீடு செய்வதற்கு ரஞ்சனுக்கு உரிமையுள்ளது,

இதன் போது இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்த இவ்வாறு பதிலளித்தார்.

கிடைக்கப்பெற்ற தீர்ப்பை சட்டமா அதிபருடன் கலந்துரையாடி நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம். நீங்கள் அந்த தீர்ப்பை சரியாக வாசித்துப் பாருங்கள்,இந்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மையப்படுத்தியே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது குறுக்கிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை மையப்படுத்தி அரசியலமைப்பு ரீதியாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது,ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்துக்கு வௌியே நீதிமன்றத்தை விமர்சிக்கின்றார்,எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்குள்ளே இருந்து நீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர்.,இவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை விமர்சிப்பதற்கு இடமளிக்கக் கூடாது,

அதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் நலின் பண்டார ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்ப முயன்ற போது நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை   வெற்றிடமாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை  பதவிக்கு கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு  47 ஆயிரத்து  212 வாக்குகளை பெற்று  5 ஆவது இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz