மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்த விவகாரம்: அனுர வெளியிட்ட கருத்து!

- Advertisement -

குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்தமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் உயிரிழந்ததன் மூலம் முக்கிய சாட்சியங்கள் இழக்கப்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாகவும், அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஆகவே, குறித்த இந்திய பிரஜை உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி குறித்த இந்திய பிரஜை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இந்திய பிரஜை வாரியபொல சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz