பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
11 கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்ப நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் குறித்து சுகாதார அமைச்சுடன் பல்வேறு தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள போதிலும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிற்றூழியர்கள் வார இறுதி நாட்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.