நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, மல்வானை, கொஸ்கம, சீத்தாவாக்கை, மல்தெனிய, ரொசெல்ல, தலவாக்கலை, சீதாஎலிய, எட்டம்பிட்டிய, பசறை மற்றும் வரலந்த ஆகிய பகுதிகளில், இவ்வாறு சூரியன் உச்சம் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மதியம் 12.13 அளவில் குறித்த பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.