மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுக்க உத்தரவு பிறக்குமாறு கோரி வழக்குத் தாக்கல்!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனம் அடைந்த நபர்களுக்கு, இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுக்க உத்தரவு பிறக்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனம் அடைந்த நபர்களின் உறவினர்களினால், இன்றைய தினம் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

- Advertisement -

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், அவற்றை தடுக்கத் தவறியமை மற்றும் தமது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளாமை ஆகிய குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனம் அடைந்த நபர்களுக்கு, இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி Naufar மௌலவியே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறியுள்ளார்.

அத்துடன், Naufar மௌலவி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz