மேல்மாகாணத்தில் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தனியார் வகுப்புகளை நடாத்துவது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு தனியார் வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனியார் வகுப்புகளில் ஒவ்வொரு ஆசனத்துக்கு இடையிலும், ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படுவது அவசியம் எனவும், சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.