மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாம் எண்ணெய் விவகாரம் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விடுத்த அறிவிப்பு!

- Advertisement -

நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதியினை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானமானது பேக்கரி உற்பத்தி துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களுக்கு அத்தியாவசியமான வெண்ணெய், பாம் எண்ணெயினை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதனால், அதனை தடை செய்வதானது  அனைத்து பேக்கரி பொருட்களிலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினை  கடுமையாக எதிர்ப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்கரி உற்பத்திகளில் 75 வீதமான பொருட்களுக்கு பாம் எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும், பேக்கரி உற்பத்திகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயினை பயன்படுத்த முடியாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பாம் எண்ணெய் மீதான தடையினை மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான தடையுடன் ஒப்பிட முடியாது எனவும் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பேக்கரி உற்பத்தியாளர்களின் தேவை பூர்த்திசெய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே பொருத்தமான தீர்மானம் எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லை எனில் பேக்கரி உரிமையாளர்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும்  கில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  நேற்று அறிவித்தார்.

இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz