யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நண்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 33 வயதுடைய பெண் ஒருவரும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1 கிலோ கிராம் 750 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.