மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம் எந்த அடிப்படையில் வஹாபிசம் என்ற விடயத்தை தீர்மானிக்கிறது?- முஜிபுர் கேள்வி

- Advertisement -

அரசாங்கம் எந்த அடிப்படையில் வஹாபிசம் என்ற விடயத்தை தீர்மானிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்படி, அதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுத்தார்.

- Advertisement -

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி – பதில் அமர்வின் போதே, முஜிபுர் ரஹ்மான் இந்தக் கேள்வியை முன்வைத்தார்

அண்மைக் காலங்களில் பல்வேறு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றதை எமக்கு ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அடிப்படைவாதம் அல்லது வஹாபிசத்தை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வஹாபிசம் என்ற விடயத்திற்கு ஏதேனும் வரையறைகள் அல்லது விளக்கங்கள் உள்ளதா?வஹாபிசத்தை கண்டு கொள்வதற்கு ஏதேனும் ஒரு முறைமை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதா

இந்த நிலையில், குறித்த கருத்துக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு பதில் வழங்கினார்.

அது சாதாரண ஒரு விடயமாகும். ஐ.எஸ் என்பது. எண்ணக்கருவாகும். வஹாபிசம் என்றால் முஸ்லிம் மக்கள் மாத்திரமே இருக்க வேண்டும், முஸ்லிம் மதத்திற்கு எதிராக உள்ள அனைத்து விடயங்களையும் அழிக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். வஹாபிசமும், ஐ.எஸ் அமைப்பும் ஒரு கொள்கை தான். 2104 ஆம் ஆண்டில் பக்தாதி என்பவராலே அது உருவாக்கப்பட்டது. முஸ்லிம் இனத்தவர்கள் அல்லது முஸ்லிம்களின் மதம் மாத்தரம் இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். இதன்படி அவ்வாறான கொள்கையில் இருப்பவர்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வதோடு, அவர்களைக் கைது நாம் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz