மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜோசப் ஆண்டகையின் வித்துடல்..!

- Advertisement -

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல்  மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல்   கடந்த  நான்கு  நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று  பிற்பகல் 2 மணி வரை மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல்  3  மணியளவில் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன்,  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நிகழ்வில்   பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மன்னார் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில்,  வீதி மற்றும் வீடுகளில்  கறுப்பு மற்றும் வெள்ளை  நிற கொடிகள் பறக்க விடப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு நாடளாவிய  ரீதியில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்படி,  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்  மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளானர்.

அத்துடன், மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , மறைந்த ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு  ஜோசப் ஆண்டகை  தனது 80 ஆவது வயதில்  கடந்த முதலாம் திகதி  காலமானார்.

இராயப்பு  ஜோசப் ஆண்டகை நீண்ட நாள் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம்    திருச்சிலுவை  மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz