உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை இன்று வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது இறக்குமதிய செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய் விநியோகத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முள்ளுத் தேங்காய் செய்கைக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.