யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருட்டுச் சம்வங்களுடன், தொடர்புடைய இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த சில மாதங்களில், சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை திருடியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை நாளைய தினம் யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக யாழ் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த உபகரணங்கள், தேவாலயம் மற்றும் கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் களவாடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.