மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பின்னணியுடன் செயற்படும் கார்தினால் – தயாசிறி ஜயசேகர!

- Advertisement -

பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் பின்னணியுடன் செயற்படுவதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த கருத்துத் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே, தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

மைத்திரிபால சிறிசேன குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை. குண்டுதாரியையைத் தான் நாம் தேட வேண்டும். உண்மையான குண்டுதாரி யார் என்ற விடயம் தற்போது கீழே செல்கின்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது மீளக் கட்டியெழுப்பி வருகின்ற நிலையில், சுதந்திரக் கட்சியை மீள அழிப்பதற்கு சில சக்திகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கார்தினால் இந்த விடயத்தில் நியாயமாக சிந்திப்பார் என நான் நினைக்கின்றேன். அவரின் கருத்துக்குப் பின்னால், பாரிய அரசியலொன்று இருக்குமென்றே நான் கூறுகின்றேன்.

கார்தினால் அரசியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதைத் தான் இறுதியாக கூற வேண்டியுள்ளது.

இதேவேளை, கார்தினாலின் கருத்துக்கள் குறித்து, தான் மிகுந்த கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தலுக்கு போட்டியிடுகின்றமை குறித்து, தாம் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே, அது குறித்து தீர்மானிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz