இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர், பெருந்தோட்ட மக்களின் பணங்களை மோசடி செய்வதாக, தாழ்நில தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் கால்லகே குற்றஞ்சாட்டுகின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- தமது தந்தை உள்ளிட்ட பரம்பரையினர், மக்களுக்காக செய்த அனைத்து சேவைகளையும், அவர்களின் கௌரவத்தையும் ஜீவன் தொண்டமான் இல்லாது செய்துள்ளார்.
வெட்கமின்றி வேஸ்டி அணிந்து கொண்டு தோட்டப்புறங்களுக்கு செல்ல வேண்டாம். எதிர்வரும் காலத்தில் உங்களுக்கு எந்த வகையிலும் அந்தப் பகுதிகளுக்கு செல்ல முடியாது. மக்களை இந்தளவு ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
தொழில்துறை அமைச்சர் ஆயிரம் ரூபா தருவதாக கூறினார், அதனையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன, சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள் எனில், 200 ரூபா வீதம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளையே இவர்கள் முன்னெடுக்கின்றார்கள்.
இவ்வாறு மோசடி செய்வதற்கு ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டத் துறை அமைச்சர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோர் இதனுடன் தொடர்புட்டுள்ளார்கள்.