மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோய் ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயினை மீள அனுப்ப தீர்மானம்..?

- Advertisement -

புற்றுநோயினை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 5 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் நாளை மலேஷியாவுக்கு மீள அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டான பகுதியில் உள்ள  தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த தேங்காய் எண்ணெய் கொள்கலனில் 100 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக  சுங்கத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நான்கு தனியார் நிறுவனங்களுடாக இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலனில் புற்றுநோயினை ஏற்படுத்தும் ரசாயனம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்திருந்தது.

சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் தொழிற்துறை தொழினுட்ப நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் சுங்க திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தங்கொட்டுவ பகுதியில் கடந்த வாரம் தேங்காய் எண்ணெய் கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனை முடிவு இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz