கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களை எதிர்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விபரங்கள் அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
அரசியல் பழிவாங்கல்களை எதிர்கொண்ட சுமார் 50 பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆணைக்குழுவில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் முறைப்பாடு பதிவு செய்திருந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.