நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 6 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதற்கமைய, கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் ஆயிரம் சீன தொழிலாளர்களுக்கு Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கொழும்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிபுணர் குழுவின் ஆய்வுகளின் பின்னர், இலங்கை பிரஜைகளுக்கும் Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது