உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின்அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமைச்சரவை உபகுழுவினை நியமித்திருந்தார்.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குறித்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை குறித்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டுவார காலஅவகாசம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
இந்த நிலையில் குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.