மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வித்துடல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஆயரின் திருவுடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு இன்று மூன்றாவது நாளாகவும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நாளை பிற்பகல் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை பிற்பகல் 3 மணியளவில் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.