நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் பொதுமக்களின் ஆரோக்கியம் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வீட்டிலிருந்து சித்திரைப்புத்தாண்டை கொண்டாடினர். அதேபோல் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சநிலைமை ஏற்பட்டதன் காரணமாக வீட்டிலிருந்தவாறு சித்திரைப்புத்தாண்டை கொண்டாடினார்கள் ஆனால் இந்த முறை எந்தவிதத்திலேனும் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த பட்சம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சம்பிரதாயத்தையேனும் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. அரிசி, பருப்பு, சீனி, காய்கறிகள் என அனைத்தும் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்தினர் ரசாயனம் கலந்துள்ள தேங்காய் எண்ணெயினை இறக்குமதி செய்துள்ளனர். உயிராபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். பொதுமக்களின் ஆரோக்கியம் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுகின்றனர்.