மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தினால் தரமற்ற உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை: ஆளும் தரப்பு கருத்து..!

- Advertisement -

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தினால்  தரமற்ற   உணவுப்பொருட்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் நுகர்வோர் பாவனைக்கு  அனுமதி வழங்கப்படாத  பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள்  இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றை இறக்குமதி செய்தது மாத்திரமல்லாது அவை நுகர்வோருக்கும்  விநியோகிக்கப்பட்டன. மேலும் பல்வேறு  வர்த்தமானிகளை  வெளியிட்டு  இறக்குமதிகளுக்கு நாட்டில் சுதந்திரத்தை   வழங்கியிருந்தனர். தரமற்ற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆட்சிக்காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன.  ஆனால் தற்போது எமது ஆட்சியில்  அவ்வாறான சுற்றறிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. தரமற்ற உணவுப்பொருட்களை. இறக்குமதி  செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால்  தரமற்ற   உணவுப்பொருட்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி  செய்யப்படவில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz