மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸஹ்ரானுடன் தொடர்புடைய அமைச்சர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர்: மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு!

- Advertisement -

ஸஹ்ரானுடன் நெருங்கிப் பழகிய அமைச்சர்கள் சிலர், பொது வெளியில் சுதந்திரமாக செயற்பட்டு வருவதாக, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சாட்டுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி, கொட்டாஞ்சேனை  கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

- Advertisement -

இந்த விடயங்களை பரிசீலிப்பதற்கு மேலும் குழுக்களை நியமிக்கத் தேவையில்லை. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இந்த அழிவை தடுப்பதற்கு தமது கடமையையும், பொறுப்பையும் தவறிய தலைவர்களின் பெயர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் இது குறித்து வினவ விரும்புகின்றேன். இதனுடன் தொடர்புடைய மற்றும் தொடர்புகளை வைத்திருந்த சில அமைச்சர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் கிடைத்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய வேண்டும். ஸஹ்ரானுடன் சிரித்துப் பழகிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது எமது மக்களுக்கு செய்கின்ற அவமதிப்பாகும். இதனால் இதற்கான நியாயத்தையும், நீதியையும் நான் இன்னும் கோரிக் கொண்டிருக்கின்றேன். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர்இவை நடைமுறைப்படுத்தவிடவில்லை என்றால் நாம் வீதிக்கு இறங்குவோம்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz