நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 97 பேர் அடையளாம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 392 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 208 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் 2 ஆயிரத்து 506 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
இந்த நிலையில், நாட்டில இதுவரை கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 581 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.