சட்டத்தரணிகளின் பங்கேற்புடன், கண்டி தனியார் ஹோட்டலொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சட்டத்தரணி ஒருவரின் உறவினர் ஒருவருக்கும், ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, காயமடைந்த நால்வரில் இரண்டு பேரின் நிலைமைக்கு கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஹோட்டலின் பல்வேறு பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.