தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டிற்குப் பின்னர் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்காச் சோளம் கிடைக்கும் பட்சத்தில் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைய கோழி இறைச்சி கிலோ ஒன்று 430 முதல் 500 ரூபா வரை தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.