மன்னாரில் இருந்து சட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் தமிழக சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த போதே குறித்த இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம் குறித்த இளைஞர்கள் வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக கடலோர காவல் குழும பொலிஸ், க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை ஆகியோரினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.