நாட்டில் கடந்த ஆண்டின் இறுதி முதல் தற்போது வரை நுகர்விற்கு உற்படுத்த முடியாத விச தன்மை கொண்ட சுமார் 100 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு முன்னெடுத்த ஆய்வுகளின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த காலப்பகுதியில் சுமார் ஆயிரம் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட 354 கொள்கலன்களில் 22 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் நுகர்வுக்கு பொருத்தமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது