சதோச விற்பனை நிலையங்களுக்கு குறைந்த விலையில் அரிசியினை பெற்றுக்கொடுக்க தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சம்பா அரிசி 89 ரூபாவுக்கும் நாட்டரிசி 90 ரூபாவுக்கும் தனியார் நிறுவனங்களினால் சதோச விற்பனை நிலையங்களுக்கு அரிசி பெற்றுக்கொடுக்கபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் உருவாக்கபட்டுள்ள போட்டி தன்மை காரணமாகவே இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும். குறைந்த விலையில் அரிசியினை விற்பனை செய்வதற்காக வேண்டிய நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவம் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் தேசிய அரிசி தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோகிராம் அரிசியை சேமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.