மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் சட்டங்கள் குறித்த ஆராய விசேட குழு – நாடாளுமன்றத்தில் முன்மொழிவு?

- Advertisement -

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காக விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன, சபை ஒத்திவைப்பு வேளையின் போது இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

- Advertisement -

இதன்படி, 15 உறுப்பினர்களை உள்ளடக்கிய  விசேட நாடாளுமன்ற குழு சபாநாயகரினால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த குழு தமது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 6 மாத காலம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதுடன், இந்த விடயம் தொடர்பில் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வது இக்குழுவின் நோக்கமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தினை எதிர்வரும் 7 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் நான்காவது நாளாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz