நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவலைப்பு நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த, பேலியகொடை, அளுத்கமை மற்றும் சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின் போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இவ்வாறு தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.