மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்: மன்னார் மறை மாவட்ட ஆயர்!

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இன்றைய உயிர்த்த ஞாயிறு நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட செய்தியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், கொழும்பு பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும்  கட்டுவாப்பிட்டி செபஸ்டியன் தேவாலயம்  ஆகியவற்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இதன்போது  சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில், அனைத்து கிறிஸ்தவ மக்களும் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்ற நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, பிரதான திருச்சபைகள் மற்றும் சுயாதீன திருச்சபைகள் என அனைத்து தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் தற்போது உள்ள கொவிட் அச்சுறுத்தல், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து விசேட பிராத்தனைகள் இடம்பெற்றதாக  எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாட்டு நிகழ்வுகள்,  மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடைய, மலையகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும், உயிர்த்த ஞாயிறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு  விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி,   நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆயிரத்து 944 கிறிஸ்தவ தேவாலயங்களில் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்கமைய,  9 ஆயிரத்து 356 பொலிஸ் அதிகாரிகள், 146 விசேட அதிரடிப் படையினர் மற்றும்  முப்படையினர் உள்ளிட்ட 12 ஆயிரத்து 40 பேர் பாதுகாப்பு  நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

அத்துடன்,  தேவாலயங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் சிவில் உடைகளிலும்  கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக உரிய தரப்பினருக்கு அறியப்படுத்துமாறு  பாதுகாப்புஅமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz