மெய்ப்பொருள் காண்பது அறிவு

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி..!

- Advertisement -

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கருகில் இன்று இடம்பெற்றுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

டயகம பகுதியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளுடன், இதற்கு நேரெதிரில் பயணித்த கனரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், டயகம பகுதியைச்சேர்ந்த 22 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டர் சைக்கிள் செலுத்துனர் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த வாகன விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கித்துல்கல வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி..! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz