கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று இரவு குறித்த சந்தேக நபர்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுன் மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.