- Advertisement -
பிரதான ரயில்மார்க்கங்களின் ஊடான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
ராகம ரயில் நிலையம் அருகில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் மார்க்கங்களில் முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்திருந்தது.
- Advertisement -
குறிப்பாக கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில்சேவைகள் பெரும்பாலும் தாமதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.