பதுளை மாவட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, இன்று பாரிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம், ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கத்தின் ஏற்பட்டில், ஊவா மாகாண சபை முன்றலில் தற்போது இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு பதாகைகளையும், சுலோகங்களையும் ஏந்தியுள்ளனர்.
தமக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.