மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைக்கல்விக்குள் ஒரு பாடமாக சட்டம்..!

- Advertisement -

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க நாடாளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சட்டம் குறித்த பொதுமக்களின் அறிவு குறைந்த மட்டத்தில் காணப்படுவதன் காரணமாக, சட்டம் தொடர்பிலான அடிப்படைப் புரிதலை மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் அவசியமானது என, நீதி அமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் குடியியல் கல்வி வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த உப குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கமைய, சட்டத்தை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த உப குழுவில், கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சிவஞானம் சிறிதரன், வீரசுமன வீரசிங்க, சாகர காரியவசம், அமரகீரித்தி அத்துகோரல, டயனா கமகே, சுதர்ஷன தெனிப்பிட்டிய ஆகிய எட்டு பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த உப குழுவின் செயலாளராக, நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz