மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி..!

- Advertisement -

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த விபத்து சம்பவம் இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மோட்டார் சைக்கிள் சாரதி வாகன கட்டுப்பாட்டை இழந்தமையினால், வீதியோரத்திலிருந்த பனை மரத்தில் மோதி குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்ற நபர் மன்னார் வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர்கள் இருவரும் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், செட்டிக்குளம் பகுதி மரண சடங்கொன்றிற்கு சென்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz