மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய Amazon..!

- Advertisement -

இலங்கை தேசியக் கொடியின் மாதிரிகளைக் கொண்டு கால் துடைப்பான் மற்றும் பாதணி போன்றவற்றை தாயாரித்துள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள Amazon தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வணிக மற்றும்  அலங்கார நோக்கங்களுக்காக தேசியக் கொடியின் படத்தைப் பயன்படுத்துவதானது,  இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாகுமெனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தக இணையத்தளத்தில் இருந்து இந்தப் பொருட்களை உடனடியாக அகற்றுமாறு தூதரகம் Amazon நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க வர்த்தகத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் தொடர்புடைய பிரிவுக்கு தெரிவிப்பதற்கும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய Amazon..! 1 இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய Amazon..! 2 இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய Amazon..! 3 இலங்கை அரசின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய Amazon..! 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz